புதன், 29 நவம்பர், 2023

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது.

ஸ்டாலின் தி 

தமிழக அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பது  வன்மையானக் கண்டனத்திற்குரியது. 

சத்துணவுத் துறையில் இன்னும் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கான சத்துணவின் தரம் இன்னமும்கூட கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
இன்னொரு பக்கம் சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கான பணி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றிற்காக போராடிக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த மாதம்(அக்டோபர் 2023) காஞ்சிபுரம் -செங்கல்பட்டு மாவட்ட சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று 'காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை வைத்தே செயல்படுத்திட வேண்டும் ' என்பதாகும். இந்த கோரிக்கையை அரசு ஏற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு அவர்களை கைது செய்த திமுக அரசு, இன்றைக்கு தனியாரிடம் அரசு திட்டத்தை தூக்கிக் கொடுக்க  முனைகிறது.

அரசின் நோக்கமானது 
சத்துணவு திட்டங்களையும் சத்துணவு ஊழியர்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமேத் தவிர, தனியாருக்கு சத்துணவுத் துறையை தாரை வார்த்து தவறான கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

உடனடியாக, காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார்மயமாக்கும்  முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும். கூடுதல் சத்துணவு பணியாளர்களை நியமிப்பதோடு, ஊதிய உயர்வும், ஓய்வூதிய உயர்வும் அளிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...