ஸ்டாலின் தி 
எங்கேயாவது ஒரு சிலை கிடைத்தால் உடனே அதற்கு இந்து கடவுள் பெயரை சூட்டிவிடும் கயமைத்தனம்   இன்னமும் தொடர்கிறது. இதைத்தான் நாமம் போடுதல் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். நாமம் என்றால் 'பெயர்.' 
தேனி மாவட்டம் வருசநாடு   அருகில் கி.பி.13 ஆம் நூற்றாண்டு சிவன் சிலை கிடைத்ததாக செய்தி. சிலை கிடைத்த சில மணி நேரங்களில் எப்படி அந்த சிலையின் வயதை இவர்கள் கண்டிக்கிறார்கள்  என்று தெரியவில்லை. அதுபோலவே இவர்களால் சிவன் சிலை என்று கூறப்படும் சிலையானது  'அபய முத்திரை'யில் போதிக்கும் புத்தரையே  கண்முன் நிறுத்துகிறது. சிலையை கழுவி, பொய்ப் பூச்சுகளை அகற்றினால் இன்னும் தெளிவாக தெரியும். அபய முத்திரை என்பது அச்சமின்மையை போதிக்கும் பௌத்த முத்திரை ஆகும்.
இதே இடத்தில் ஐயனார் சிலையும், பேச்சியம்மன் சிலையும்  கிடைத்துள்ளன. ஐயனார் என்பது புத்தரின் மாற்று வடிவம் என்பதை நாம் அறிவோம்.  பௌத்த கல்வித் துறையின் பேராளுமையாக விளங்கிய சரஸ்வதியையே மக்கள் பேச்சியம்மன் என வணங்கி வந்தனர்.குப்புறக்  கவிக்கப்பட்ட  தாமரையின்  மீது லிங்கம் அமைக்கப்பட்டிருப்பதைப்  போன்ற சிற்பமும் கிடைத்துள்ளதாம்.   இது, அவ்விடத்தில் வீற்றிருந்த பௌத்தத்தை வீழ்த்தி  சைவ இந்துமதம் நிறுவப்பட்டதை உணர்த்துகிறது.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக