ஞாயிறு, 31 மார்ச், 2024

ரிசர்வ் வங்கியின் உருவாக்கத்தில் அண்ணல்.ஸ்டாலின் தி 

அண்ணல் அம்பேத்கர் பொருளாதார மேதையாகவும் திகழ்ந்தவர். 1913 இல் அமெரிக்கா சென்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் கற்றார். 1915 இல் 'பண்டைய இந்திய வணிகம்' என்னும் ஆய்வுக்காக முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணல், 'இந்திய தேசிய பங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு' என்னும் தலைப்பில் பொருளாதார ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரைக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை பிறகு, 'பிரிட்டிஷ் இந்திய மகாணங்களின் நிதி பரிணாமம்' என்னும் தலைப்பில் நூலாக வந்தது. 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவலாக்குதல்' என்னும் ஆய்வுக்காக அண்ணல் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். அவரது பிரபலமான 'ரூபாயின் சிக்கல்:மூலமும் தீர்வும்' என்னும் ஆய்வுக்காக அவர் 1923 இல் D.Sc பட்டம் பெற்றார்.

அண்ணலின் 'கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகமும் நிதியும்', 'பிரிட்டிஷ் இந்திய மகாணங்களின் நிதி பரிணாமம்', 'ரூபாயின் சிக்கல்கள்: மூலமும் தீர்வும்' ஆகிய ஆய்வுநூல்கள் இந்திய பொருளாதாரவியலில் முக்கிய தரவுகளாக இன்றைக்கும் இருக்கிறது என்பதை பொருளாதாரத்திற்கு நோபல் பரிசை வென்ற அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். 

முதல் உலகப்போரின் விளைவால் ஏகாதிபத்திய தேசங்களில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களைக் குறித்து ஆராயவும் தீர்வைக் காணவும் 'ஹில்டன் யங் ஆணையம்' நியமிக்கப்பட்டது. அவ்வாணையத்திடம் தமது பொருளாதார ஆய்வுகளை அண்ணல் சமர்ப்பித்தார். அண்ணலின் பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் ஹில்டன் யங் ஆணையம் 1926 இல் ரிசர்வ் வங்கி ஏற்படுத்துவதற்கான அறிக்கையை சமர்பித்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1935 ஏப்ரல் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.

(ஏப்ரல் -தலித் வரலாற்றியல் மாதம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அரசை ஆக்கிரமிக்கும் பிராமண-புரோகித நடைமுறையும், அரசுகளின் சமரசப் போக்கும்.

ஸ்டாலின் தி  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணியை துவக்கும் விதமாக, தமிழக அரசின் பொதுப...