வெள்ளி, 5 ஏப்ரல், 2024

ஏப்ரல் 5- முன்னாள் துணை பிரதமார் பாபு ஜகஜீவன் ராம் பிறந்க நாள்.

ஸ்டாலின் தி 

பீகாரில் தலித் (சமார்) குடும்பத்தில் சோபிராம்-வசந்தி தேவி ஆகியோருக்கு 1908 ஏப்ரல் 5 இல் மகனாக பிறந்தார் ஜகஜீவன் ராம். தந்தை சோபிராம் அன்றைய பிரிட்டிஷ் படையில் பெஷாவரில் பணியாற்றிவந்தார். பள்ளியில் பயிலும் போது அங்கிருந்த 'தீண்டாமை குடிநீர் பாணையை' உடைத்தெரிந்தார். 1927 மெட்ரிகுலேஷன் தேர்ச்சிப்பெற்ற ஜகஜீவன் வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழத்திலும், கல்கத்தா பல்கலைக்கழத்திலும் பட்டம் பெற்றார். இக்காலங்களில் கல்லூரி விடுதிகளில் நிலவிய தீண்டாமையை கடுமையாக எதிர்கொண்டார். 

ஆங்கிலேயர்களுக்கெதிராக எழுந்த போராட்டங்களில் பங்கேற்ற ஜகஜீவன் அதன் தொடர்ச்சியாக காங்கிரசில் 1931 இல் சேர்ந்தார். 1936 இலிருந்து சுமார் 50 ஆண்டுகள் சட்டமன்ற,உறுப்பினர் பதவிகளில் இடம்பெற்ற அரசியல் பிரபலமாக இருந்த அவர் நேருவின் அமைச்சரவையில் தொடங்கி மொரார்ஜி தேசாய் அமைச்சரவை வரை 'தொலை தொடர்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, செய்தித்துறை, போக்குவரத்து துறை, ரயில்வேத்துறை, வேலைவாய்ப்புத்துறை, உணவு-வேளாண்துறை, பாதுகாப்புத்துறை என பலத்துறைகளில் அமைச்சராக பணியாற்றிவர். பாதுகப்பு அமைச்சராக இருக்கும்போதுதான் பங்களாதேஷ் உருவாக இந்திய படை போரிட்டு வென்றது. உணவு மற்றும் வேளாண் அமைச்சராக இவர் இருந்தகாலத்தில்தான் 'பசுமைப் புரட்சி'யின் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கியது இந்தியா.

பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது சம்பூர்ணனின் சிலையை ஜெகஜீவன் திறந்துவைத்தார். அப்போது அந்த இடம்தீட்டு பட்டுவிட்டது என்று கூறி அவர் சென்ற பிறகு இந்துக்கும்பல் அவ்விடத்தில் தண்ணீர் ஊற்றிக்கழுவி தீட்டுக்கழித்தது.

அண்ணலின் அரசியலை எதிர்கொள்ள காங்கிரசு ஜகஜீவன் ராம் அவர்களை வளர்த்துவிட்டதாக கூறப்படும். ஆனால் அண்ணல் மீது மிக்க மதிப்பைக் கொண்டிருந்தவராகவே அவர் திகழ்ந்தார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார். காங்கிரசில் இருந்தாலும் அவர் தலித்துகளுக்கானவராகவும் இருந்தார். கோயில் நுழைவு, தீண்டாமை எதிர்ப்பு என்று களம் கண்டார். அவருடைய வளர்சிக்கு காங்கிரசு மட்டுமல்ல, அவருடைய ஒழுக்கம், சீர்த்திருத்த சிந்தனையுமே அவரை உயர்த்தியது.

காமராஜர் திட்டம் என்னும் கட்சிப்பணிக்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பாபு ஜகஜீவன் இந்திரா காலத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி ஜனதாவில் இணைந்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் (1977-79) துணை பிரதமராக பதவி வகித்த பாபு ஜகஜீவன் பிறகு ஜனதாவிலிருந்து விலகி 'காங்கிரசு(ஜகஜீவன் ராம்)' என்ற கட்சியையும் ஆரம்பித்தார். 1986 இல் ஜூலை மாதம் 6 ஆம் நாள் காலமானார் பாபு ஜகஜீவன் ராம்.

(ஏப்ரல்: தலித் வரலாற்றியல் மாதம்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...