ஸ்டாலின் தி
சென்னையில் 1858, டிசம்பர் 26 இல் பிறந்தவர் மதுரைப்பிள்ளை. இவரது அப்பா பெயர் மார்கண்டன். துவக்கக்கல்வியை வேப்பேரி எஸ்.பி.ஜி.பள்ளியிலும் உயர்கல்வியை ரங்கூன் செயின்ட்பால்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கற்று, கல்லூரிப்படிப்பை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் முடித்தார். 1877 இல் அன்றைய சென்னை கவர்ணர் பக்கிங்ஹாம் அவர்களிடம் எழுத்தராக பணீயில் சேர்ந்தார். பிறகு அவருக்கு வியாபார நோக்கம் வர, வணிகத்தொழிலில் ஈடுபட்டு, கப்பல் வாங்கி, துபாஷ் ஸ்டீவ்டேன் என்னும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை நடத்தினார். இதன்மூலம் முதன் முதலில் சொந்தக் கப்பல் கொண்டு தொழில் செய்த பறையராக இவர் விளங்கினார்.
கொடையளிப்பதிலும் மதுரைப்பிள்ளை புகழ்பெற்றவராக இருந்தார். இந்துக்கோயில்களுக்கும், இஸ்லாமிய, கிறித்துவ நிறுவனங்களுக்கும் நன்கொடைகளை வழங்கிக்கொண்டிருந்ததால் இவரை எல்லாதரப்பினரும் வாழ்த்தும் நிலை இருந்தது. 1500 பக்கங்களைக்கொண்ட 'மதுரை பிரபந்தம்' என்னும் நூலில் இவரைப் புகழ்ந்து 500க்கும் அதிகமான புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
உயர்நிலைப் பள்ளியைக் கட்டி கல்விக்கொடுத்த மதுரைப்பிள்ளை நீதிக்கதைகளையும், நற்சிந்தனைகளையும் நூட்களாக அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.
1906 இல் ஜார்ஜ் மன்னரிடம் 'சிறந்த பொதுநலத்தொண்டர்' என்று அறிமுகம்
செய்துவைக்கப்பட்டார். மதுரைப்பிள்ளையின் மகளான மீனாட்சி அவர்களுக்கும் பூர்வகுடி தலித் மக்களின் தலைவரான வி.ஜி.வாசுதேவப் பிள்ளை அவர்களுக்கும் மகளாக பிறந்தவர்தான் அண்ணலின் போர்ப்படையின் வீராங்கணையாக விளங்கிய அன்னை மீனாம்பாள் சிவராஜ்.
#ஏப்ரல்
#தலித்வரலாற்று_மாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக