சனி, 15 பிப்ரவரி, 2025

கோட்டையை பாதுகாத்த பறையர்கள்.




ஸ்டாலின் தி 

இந்தியாவை பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டியில் இங்கிலாந்தும், பிரான்ஸும் மோதிக்கொண்ட காலம் 18 ஆம் நூற்றாண்டுகாலம். அத்தகைய மோதலின் தொடர்ச்சியாக, 
கோரேகான் யுத்தத்திற்கு முன்பாக அறுபதாண்டுகளுக்கும் முன்பாகவே, அதாவது 1758 ஆம் ஆண்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்டது. பிரெஞ்சுப் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பிரிட்டன் படை, சென்னையின் பறையர் சமூகத் தலைவர்களை சந்தித்து துணைக் கோரியுள்ளது.  போரில் ஈடுபட்டு உயிர் சேதமடைந்தால், நிலமும் உதவித் தொகையும் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சேரி மக்கள் சென்னை கோட்டை மீதான தாக்குதலை தங்களின் மீதான தாக்குதலாகவே நினைத்து திரண்டனர். அதற்கு காரணம் அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் என்பதே ஆகும். ஆங்கிலேயர்கள் கூட 1911வரையிலும்,  சென்னையை பறையர் நகரம், கறுப்பர் நகரம் என்றே  அழைத்து வந்தனர். அன்றைக்கு சுமார் 1400 சேரிகள் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கோட்டையைக் காப்பதே சேரிகளையும் காப்பதற்காக வழியாகும் என்பதால் பிரிட்டன் படைக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர்.இவ்வாறு, பறையர்கள் திரட்சியாகத் திரண்டு, பிரிட்டன் படைக்கு துணை நின்றார்கள். பீரங்கிகள் உள்ளிட்ட  ஆயுத பலமிக்க பிரெஞ்சுப் படையோடு தீரமாக மோதினார்கள் சேரி வீரர்கள். போரில் பல நூறு சேரி வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஆனாலும், யுத்தத்தில் வென்று, பிரெஞ்சுப்படையை சென்னையை விட்டே விரட்டியடித்து, கோட்டையையும் சென்னையையும் மீட்டார்கள்.  இந்திய மண்ணில் பிரிட்டிஷ் வலுவாக காலூன்ற வகைச் செய்துகொடுத்தவர்கள் அந்த பறை வீரர்கள்தான். பறையர்களின் வீரம் கொண்டு கோட்டையில் அமர்ந்த பிரிட்டிஷ் அரசு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, வீரத்தைப் பறைசாற்றவுமில்லை. 

இந்த வீரம் செறிந்த நாள் பிப்ரவரி 16 ஆம் தேதியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...